நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: செங்கோட்டையன்
தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும், விலக்கு பெற முடியவில்லை. நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சியளிக்க 450 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, ஒன்றரை மாதத்தில் பயிற்சி தொடங்க உள்ளது. மேலும் 54 ஆயிரம் கேள்வி – பதில்கள் அடங்கிய கையேடு ஒன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என அவர் கூறியுள்ளார்.