நடக்கும், நடக்கவிருக்கும் நிகழ்வுகளை தீர விசாரித்து விருப்பு வெறுப்பு இல்லாமல் மாவட்டத்தின் எஸ்.பி.க்கு தகவல் தருவதே உளவுத்துறையிலுள்ள தனிப்பிரிவுப் போலீசாரின் பணி.! மாவட்டத்தில் நடக்கும் அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் இவர்களே பொறுப்பு என்பதால் நேர்மையான போலீசாரே இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால், முன்னாள் எஸ்.பி.யால் தண்டிக்கப்பட்ட ஒருவரை மாவட்ட எஸ்.பி.க்கே தெரியாமல் தனிப்பிரிவு ஏட்டையாகவாக நியமிக்க கொந்தளித்துள்ளனர் தூத்துக்குடி மாவட்டப் போலீசார்.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ஜெயபிரகாஷ் ( தற்பொழுதைய தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ) அங்கு பணியாற்றிய மாடசாமி (ஹெச்.சி. 2066). தற்பொழுது விளாத்திக்குளம் சப் டிவிசனில் தனிப்பிரிவு ஏட்டையாகவாக நியமிக்கப்பட்டுள்ளது தான் இந்தக் கொந்தளிப்பிற்குக் காரணம்..?
" நாகலாபுரம் புதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட மணல் குவாரி, சுண்ணாம்பு கல் குவாரி என நாலாதிசைகளிலும் வருவாயை வசூலித்து ஸ்டேஷனுக்குக் கொடுத்தவர் என அப்போதைய உளவு அதிகாரிகள் குறிப்பெழுத, அங்கிருந்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு ரைட்டராக மாற்றப்பட்டார். பின் சிறிது நாட்களில் தன்னுடைய செல்வாக்கால் விளாத்திக்குளம் காவல் நிலையத்திற்கு ரைட்டராக வர மணல் மாபியாக்களுடன் இணைந்து செயல்பட்டு, டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு வெளியாக முன்னாள் எஸ்.பி.மகேந்திரனால் நேரடியாக கண்டிக்கப்பட்டு தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்.பி.யாக முரளி ராம்பா பொறுப்பேற்க தன்னுடைய பழைய இன்ஸ்பெக்டர் தனிப்பிரிவில் இருப்பதால் அவரை வைத்து மீண்டும் விளாத்திக்குளத்திற்கே மாறுதல் வாங்கி வந்துள்ளார். அதுவும் தனிப்பிரிவு ஏட்டையாவாக.!!! தனிப்பிரிவு பொறுப்பு என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்தைப் பார்த்தால் நன்கு தெரியும். மணல் திருடனுக்கு சப்போர்ட் செய்த ஒருவருக்கே மீண்டும் அதே சப்டிவிசனில் தனிப்பிரிவில் பணியாற்றச் சொல்வது நியாயமா..? இவரைப் பற்றி, இவர் மேல் உள்ள குற்றச்சாட்டினை மறைத்து மாவட்ட எஸ்.பியிடம் மறைத்து போஸ்டிங் வாங்கியுள்ளனர். இவர் வருகையால் விளாத்திகுளத்தில் சாதிப்பிரச்சனையும், ஆற்றுமணல் திருட்டும் விஸ்வரூபமெடுக்கும் என்கின்றனர் சக காக்கிகள்.
விசாரித்து நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட எஸ்.பி. முரளி ராம்பா..?