ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. தமிழக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 'எப்படியோ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது' என்ற டோனில் தற்பொழுதுதான் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளது அதிமுக.
அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் டீ போடுவது, இஸ்திரி போடுவது என பழைய பாணியை பின்பற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியான தமாகாவை சேர்ந்த யுவராஜ் ஆகியோருடன் சேர்ந்து டீக்கடை ஒன்றில் கூலாக டீ சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இடைத்தேர்தல் போட்டியில் டி.டி.வி.தினகரனின் அமமுக பின்வாங்கியதைத் தொடர்ந்து, நாம் தமிழர், தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகள் ஈரோடு கிழக்கில் தனித்து களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.