Skip to main content

18 எம்.எல்.ஏக்கள் சம்பந்தமாக வர உள்ள தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரலாம்! - திருநாவுக்கரசர்

Published on 04/07/2018 | Edited on 04/07/2018


18 எம்.எல்.ஏக்கள் சம்பந்தமாக வர உள்ள தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

18 சட்டமன்ற உறுப்பினர்களின் விசாரணை தொடங்குவது வரவேற்கத்தக்கது. 40 லட்சம் வாக்காளர்கள் எம்எல்ஏக்கள் இல்லாமல் உள்ளனர். இது அந்த பகுதி மக்களின் வளர்ச்சியை பாதிக்கும். தீர்ப்பு விரைவில் வரும். அதற்கான முடிவுகளை நீதிமன்றம் எடுத்துள்ளது என்று கருதுகிறேன்.


 

 


வர உள்ள தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரலாம். சபாநாயகர் முடிவு ஏற்று கொள்ள விட்டால் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம். ஒரு ஆண்டிற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. உள்ளாட்சித்துறையில் நேரடியாக நிதி ஒதுக்கி வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நிதி ஒதுக்குவது நல்லதல்ல. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை இணைந்து நடத்த மத்திய அரசு முடிவு செய்து வருவது சரி அல்ல.

அவசரப்பட்டோ தனித்து முடிவு செய்யக்கூடாது. அனைத்து கட்சியிடமும் பேசி முடிவு செய்யவேண்டும். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்று விட்டு ஆலையை மூடியதற்கு பதிலாக முன்பே மூடி இருக்கலாம். அதே போல தான் 8 வழி சாலையும் எந்த திட்டமாக இருந்தாலும். தற்போது நடப்பது ஒரே வரி அல்ல பல்வேறு நிலைகளில் வரி விதிக்கப்படுகிறது. உலகத்திலேயே இந்தியாவில் தான் 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

வரி இல்லாமல் ஆட்சி நடத்தமுடியாது என்பது உண்மைதான். ஆனால் அது விதிக்கபட வேண்டிய முறை உள்ளது. நடுத்தர, ஏழை மக்கள் உபயோகப்படுத்தும் பொருள்களுக்கு வரியை குறைக்க வேண்டும். வரி விதிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மக்களும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

காவல்துறை என்கவுண்டர் செய்வது சரி அல்ல. கைது செய்து சட்டத்தின் முன் தான் நிறுத்த வேண்டும். நேற்று நடந்த என்கவுண்டர் எந்த பின்னணியில் நடந்தது என்று தெரிந்த பின்னர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்