உடல் ஆரோக்கியத்துடன் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருக்கும் பிளாகிங் முறை வெளிநாடுகளில் நடைபயிற்சி அல்லது ஜாகிங் மேற்கொள்பவர்கள், தெருக்களில் இருக்கும் குப்பைகளை பை ஒன்றில் சேகரித்து, அதைக் கொண்டு குப்பைத் தொட்டியில் போடுவார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் சுற்றுப்புறமும் நலம் பெறுகிறது.
இந்நிலையில், இந்த பிளாகிங் முறையை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அக்டோபர் 2ம் தேதி நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. திருச்சி மாநகராட்சி முதல்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிளாகிங் இதற்காக, பூமி தினமான ஏப்ரல் 22 ஆம் தேதி சிறப்பு பிளாகிங் நிகழ்ச்சியை தொடக்க விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது காவிரி ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றினார்கள்.
தற்போது இரண்டாவது முறையாக இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் பகுதியில் பிளாகிங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் நாட்டுநலப்பணி மாணவர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் அழைப்பு கொடுக்கப்பட்டு 2000 பேருக்கு மேல் ஒரே இடத்தில் திரட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பை மற்றும் கையுறை மற்றும் டிசர்ட் மற்றும் காலை உணவு ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ஆதி, கோபிநாத், ஜேம்ஸ்வசந்த், கலெக்டர் ராசாமணி, போலிஸ் கமிஷர் அமல்ராஜ், மாநகராட்சி கமிஷனர் ரவிசந்திரன், அரசுமருத்துவமனை டீன், அனிதா, ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் மிகவும் சுத்தமாக இருக்கும் இடங்களில் அண்ணா விளையாட்டு அரங்கம் சுற்றியுள்ள பகுதி. இந்த பகுதியில் தான் தற்போது புதிதாக சாலை போட்டப்பட்ட இடத்தில் பெரிய மேடையை அமைத்து. இவ்வளவு பிரபலங்களுக்கு பணம் கொடுத்து வரவழைத்து ஓரே இடத்தில் 2000 பேரை அழைத்து கையில் பையில் குப்பை எடுப்பது நிகழ்ச்சி ஆனால் இங்கே எல்லோரும் நடிகர் ஆதியுடன் செல்பி எடுப்பதிலே அதிகம் கவனம் செலுத்தியது. நடிகர் ஆதியும், கோபிநாத்தையும் எரிச்சல் அடைய வைத்தது.
திருச்சியில் குப்பைகள் மிகுந்த சாலைகள் நிறைய இருக்கும் போது இப்படி பிரபலங்களுக்கு பணம் கொடுத்து வரவழைத்து ஏனோதானோ என்று பொழுதுபோக்கு நிகழ்ச்சி போன்று கோடிகணக்கில் நிதியை இப்படி நிகழ்ச்சிகள் மூலமாகவே இலட்ச கணக்கில் பணத்தை செலவு கணக்கு காண்பிப்பது அப்பட்டமாக தெரிகிறது. வி.ஐ.பி.கள் அனைவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்து சிட்டாக பறந்தனர்.
இப்படி இலட்ச கணக்கில் செலவு செய்யும் பணத்தை முறைப்படி துப்புறவு தொழிலாளர்களுக்கு கொடுத்து முறைப்படி வேலை வாங்கினாலே நகரம் தூய்மையாகும்.
திருச்சி மாநகராட்சியில் இப்படி தினமும், ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடத்தி கணக்கு காண்பிப்பது தான் தற்போது மாநகராட்சியின் முதன்மையான வேலையாக இருப்பது வேதனையாக உள்ளது.