அ.தி.மு.கவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க தொடர்ச்சியாக வருகை தந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் தற்பொழுது தொடங்கியுள்ளது.
முன்னதாக முக்கிய நிர்வாகிகள் வருகை தந்த நிலையில், தற்போது முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர், ஓ.பி.எஸ் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இருவரின் வருகையின் பொழுதும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஒருபுறம் 'இ.பி.எஸ் தான் நிரந்தர முதல்வர்' என முழக்கம் எழுப்ப, மறுபுறம் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள் 'அம்மாவின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்' என முழக்கமிட்டனர். அதனையடுத்து அ.தி.மு.க உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. 2021 சட்டசபைத் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்ததை அடுத்து நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.