Skip to main content

"கல்லூரிகளில் வாரத்திற்கு ஆறு நாள் நேரடி வகுப்புகள்"- தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

"Six days a week live classes in colleges" - Tamil Nadu Higher Education Secretary's order!

 

தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் இன்று (22/11/2021) பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு ஆறு நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும். ஜனவரி 20- ஆம் தேதி முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நேரடி செமஸ்டர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளரின் உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்