ஊர்ந்து வரும் காவிரி தண்ணீரில் ஆடி பாடி மகிழும் குழந்தைகள்..!
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி காவிரி நீர் திறந்து விடப்படுவது தான் வழக்கம். ஆனால் இந்த வருடம் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இதனால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நடைபெறாதது மட்டும் இன்றி நிலத்தடி நீராதாரம் குறைந்து குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடும் பஞ்சமும் ஏற்பட்டது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாத இறுதியில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு வந்து சேருவதற்குள் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 3ம் தேதி ஸ்ரீரங்கம் காவிரி கரை அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா களை கட்டவில்லை. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த குழாய் நீரில் தான் மக்கள் புனித நீராடினார்கள்.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு கடந்த சில நாட்களுக்கு முன் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று முன்தினம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து காலை தண்ணீர் மெதுவாக ஊர்ந்து கம்பரசம்பேட்டை தடுப்பணையை அடைந்தது.
பல மாதங்களாக தண்ணீர் இன்றி பாலைவனமாக காட்சி அளித்த தடுப்பணைக்கு தண்ணீர் வந்ததும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் ஓரளவிற்கு மகிழ்ச்சி அடைந்தனர். தடுப்பணையில் தண்ணீர் வழிந்த போது பூக்களையும், துளசி இலையையும் தூவி வரவேற்றனர். பெண்கள் காவிரி அன்னைக்கு தீபம் தங்கள் பத்தியை வெளிப்படுத்தினார்கள்
சிறுவர்களும், இளைஞர்களும் தடுப்பணையில் இருந்து குதித்து தேங்கி நின்ற தண்ணீரில் ஆட்டம் போட்டனர். பெண்கள் குடும்பத்துடன் வந்து குழந்தைகளுக்கு பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்து கொட்டிய காவிரி நீரின் அழகை வேடிக்கை காட்டினார்கள். சிலர் ஆர்வ மிகுதியால் தடுப்பணை தெரியும் வகையில் நின்று ‘செல் போன்களில் செல்பி எடுத்துக்கொண்டனர். இதனால் கம்பரசம் பேட்டை தடுப்பணை நேற்று காலையில் இருந்தே மக்கள் கூட்டமாக காணப்பட்டது.
கம்பரசம் பேட்டை தடுப்பணையில் வழிந்தோடிய காவிரி நீர் அம்மா மண்டபம் படித்துறையை தாண்டி திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆனாலும் இந்த தண்ணீர் கல்லணையை சென்றடையுமா? என தெரியவில்லை. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது ‘மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தாலும் முக்கொம்புக்கு 4,200 கன அடி தண்ணீர் தான் வந்து சேர்ந்து உள்ளது.
கம்பரசம் பேட்டை தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைத்து உள்ளோம். திருச்சியில் இருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, மற்றும் திருச்சி மாநகரின் தண்ணீர் பஞ்சத்திற்காக காவிரி நீர் ராட்சத குழாய்கள் புதிதாக போட்டு தண்ணீர் அனுப்பப்பட்டு வருவதால் நிலத்தடி நீராதாரத்தை பெருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- ஜெ.டி.ஆர்