சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.
![Showers in all districts in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/RndEelfH-R2o3anpzMfJNRHY3GH6m3Qs1a9DHL4hWMo/1571296927/sites/default/files/inline-images/z159.jpg)
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம் கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 சென்டி மிட்டர் மழையும், கன்னியாகுமரி, கொடைக்கானலில் 13 சென்டி மீட்டர் மழையும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 12 சென்டி மீட்டர் மழையும், திருவாரூரில் 9 சென்டி மீட்டர் மழையும், மகாபலிபுரத்தில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது எனக்கூறினார்.
மேலும் நேற்று அறிவிக்கப்பட்ட குமரிக் கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை விலகிக்கொள்ளப்படுவதாக கூறிய அவர், தென்கிழக்கு அரபி கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய கேரளா கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவித்தார்.