திருவாரூரில் கடைகள் அடைப்பு - பதற்றம்
திருவாரூர் குடவாசலில் 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தினகரன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் சாமிநாதானி தாக்கியதாக தினகரனால் நியமிக்கப்பட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.