Published on 31/08/2020 | Edited on 31/08/2020
தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை (01/09/2020) திறக்கப்படும் நிலையில், வணிக வளாகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி, "வணிக வளாகங்களின் நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் கிருமிநாசினி வழங்க வேண்டும். வணிக வளாகங்களிலுள்ள லிஃப்ட், நகரும் படிக்கட்டுகளில் போதிய சமூக இடைவெளிப் பின்பற்றப்பட வேண்டும். வணிக வளாகங்களில் இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும். வணிக வளாக உணவகங்களில் உள்ள இருக்கைகளில் 50% பேர் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாக உணவக சமையலறை, உணவு தயாரிப்பு மூலப்பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும்." என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.