Skip to main content

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஷாக்!

Published on 02/01/2018 | Edited on 02/01/2018
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஷாக்!

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏக்கள் தாங்கள் வகித்து வந்த அ.தி.மு.க பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தர்மபுரி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 150 க்கும் மேற்ட்டவர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.  நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் கடசியில் இருந்து நீக்கபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இன்று, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம். கோதண்டபாணி,  வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர் பொறுப்பிலும், குடியாத்தம் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் திருமதி சி. ஜெயந்தி பத்மநாபன், 

கடலூர் கிழக்கு மாவட்டம், விருத்தாசலம் நகரக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.டி.கலைச்செல்வன், தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் கே. கதிர்காமு, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் எஸ்.மாரியப்பன் கென்னடி,

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் எஸ்.முத்தையா அவர்களும், தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.சுந்தரராஜ், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஒன்றியக் கழக இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி கு.உமாமகேஸ்வரி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்