Skip to main content

நள்ளிரவில் திடீரென சிவாஜி சிலையை திறந்த ரசிகர்கள்!

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
நள்ளிரவில் திடீரென சிவாஜி சிலையை திறந்த ரசிகர்கள்!



திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 7 வருடங்களாக திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலையை தீடிரென நள்ளிரவில்  சிவாஜி ரசிகர்கள்
திறந்தனர்.

2011-ல் தி.மு.க. ஆட்சியின் போது, திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு 15 இலட்ச ரூபாய் நிதி கொடுத்திருந்தார். அதன் பிறகு அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகளின் படி, சிலை துணியால் மூடப்பட்டது. அடுத்து அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனாலும் சிவாஜி சிலை திறப்பு கிடப்பில் போடப்பட்டது. இந்த சிலையை திறக்க வேண்டுமென வேண்டுமென திருச்சி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அரசு எந்தவொரு நடவடிக்கைகையும் எடுக்கவில்லை

திருச்சியில் , சிவாஜி சிலை அமைக்கப்பட்ட திறக்கப்படவே இல்லை. சிலையை நிறுவ மட்டும் மாநகராட்சியில் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் திறப்பதற்கு மட்டும் யாரும் அனுமதி கொடுக்காமலே இருந்தனர். இந்த நிலையில்

நள்ளிரவில் அகில இந்திய சிவாஜி மன்றத்தை சேர்ந்தவர்கள் சி.சீனிவாசன் தலைமையிலும் - திருச்சி மாவட்ட சிவாஜி மன்றத்தை சேர்ந்தவர்கள் ஆ.சி. பிரபு, பழக்கடை ராஜா ஆகியோர் தலைமையில் திரண்டு மூடியிருந்த சிவாஜி சிலை திறந்தனர். தங்களுக்குள்ளே வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

காலையில் அந்த வழியே ரோந்து வந்த பாலக்கரை போலிசார் அதிர்ச்சியடைந்து திறந்திருந்த சிவாஜியை உடனே பழைய துணிகளை வைத்து மூடி பழைய நிலைக்கு கொண்டு வந்தனர்.

சென்னையில் நீண்ட போராட்டத்திற்கு பின்பு மணி மண்டபம் வரை வந்திருக்கிறது. இந்த திருச்சி சிலை வைத்து 7 ஆண்டுகள் ஆகியும் எப்போது திறப்பார்களோ என்கிற கவலையில் திருச்சி சிவாஜி ரசிகர்கள்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்