மன நலம் பாதிப்பிற்காக தர்காவில் தங்கி சிகிச்சை எடுத்த பெண்ணை, தந்தை கண்முன்னே 16 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள் சீரழித்தது வெளியுலகத்திற்கு தெரியவர, எழுவரையும் கைது செய்து ரிமாண்டிற்கு அனுப்பியுள்ளது மாவட்ட காவல்துறை. 2001ம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்து நாட்டையே உலுக்கியது. அது தான் ஏர்வாடியைப் பொறுத்தமட்டில் பெரிய விஷயமாக இருந்தது. அதன் பிறகு இந்த விவகாரம்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ளது சுல்தான் சையது இப்ராஹிம் சையது ஒலியுல்லா தர்கா. இந்த தர்காவிற்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவதுண்டு. அதிலும், இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாகமே மாறிவிட்டது ஏர்வாடி தர்கா. இந்த நம்பிக்கையின் மிகுதியில் கவரப்பட்ட கேரளாவினை சேர்ந்த பேகத், தன்னுடைய 21 வயது மகளான ஷானிதாவிற்கு ஏற்பட்ட மன நோயை சரிசெய்ய இங்கு அழைத்து வந்து காட்டுப்பள்ளி என்கிற இடத்தில் தங்கி கடந்த 2 மாதங்களாக தன் மகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை வேளையில் மகளின் இயற்கை உபாதைக்காக அங்கிருக்கும் கழிவறைக்கு அழைத்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த 16 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தந்தை பேகத்தை தாக்கி தள்ளிவிட்டு, அவரின் கண் எதிரிலேயே வாயை பொத்தி தூக்கிச் சென்று அருகில் இருந்த கருவேலங்காட்டுக்குள் வைத்து ஒன்றுமறியாத ஷானிதாவினை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அந்தப் பெண்ணின் கூக்குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்ததில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதும் அந்த பகுதியை சேர்ந்த இளம் சிறுவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 7 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி ரிமாண்டிற்கு அனுப்பியுள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட கேரள பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்ட சம்பவம், அதைத்தொடர்ந்து 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஏர்வாடி தர்கா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.