Skip to main content

சசிகலா, தினகரன் கட்சி, ஆட்சியை வழி நடத்தும் சூழல் உருவாகும்: ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.,

Published on 25/08/2017 | Edited on 25/08/2017
சசிகலா, தினகரன் கட்சி, ஆட்சியை வழி நடத்தும் சூழல் உருவாகும்:  ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.,

சென்னை அடையாறில் டிடிவி தினகரன் இல்லத்தில் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி நேற்று தினகரனை சந்தித்தார்.  முன்னதாக தினகரனுக்கு 19எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இவர்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றி்ல் தங்கியுள்ளனர். தற்போது அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, தினகரன் அணிக்கு சென்றுள்ளதால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்..ஏ.க்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

தினகரனை சந்நிதப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தும் சூழல் உருவாகும் என அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி கூறினார்.சசிகலா தான் பொது செயலாளர், தினகரன் தான் துணை பொது செயலாளர் இருவரும் அதிமுகவை வழி நடத்தும் சூழல் உருவாகும். அ.தி.மு.கவில் உள்ள 133 எம்.எல்.ஏக்களில் நானும் ஒருவன் என கூறினார்.

சார்ந்த செய்திகள்