சசிகலா, தினகரன் குறித்து முதலமைச்சர் அணியினர் தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர்; செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
தினகரன் ஆதரவு எம்.எல் ஏக்கள் 19 பேர் கடந்த 3 நாட்களாக புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் வின்ட் ப்ளவர் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் விடுதியிலிருந்து முதலியார்பேட்டை நூறடி சாலையிலுள்ள சன் வே மேனர் ஹோட்டலுக்கு வந்து தங்கியுள்ளனர்.
ஹோட்டலுக்கு செல்லும் போது எம்.எல்.எல் ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தனர்.
" சன் ப்ளவர் விடுதி அறைகள் 2 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் வேறு விடுதிக்கு மாறுகிறோம். தினகரன் இன்று புதுச்சேரி வருகிறார், அவருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தங்கதமிழ்செல்வன் கூறினார். இதேபோல் செந்தில் பாலாஜி கூறும் போது, "எனது தொகுதியில் சிலரின் தூண்டுதலின் பேரிலேயே காணவில்லை என போஸ்டர் ஒட்டியுள்ளனர். எங்கிருந்தாலும் தொகுதிக்கான செயல்பாடுகள் தொய்வின்றி நடக்கும்.
சசிகலா, தினகரன் குறித்து முதலமைச்சர் அணியினர் தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர். கட்சியை காப்பாற்றும் அண்ணன் தினகரனின் நடவடிக்கைகளுக்கு உறுதியாக அவர் பின்னால் இருக்கிறோம். சபாநாயகரின் கடிதம் இன்னும் வரவில்லை கடிதம் கிடைத்த பின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
- சுந்தரபாண்டியன்