திருச்சி அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்த பாலமுரளி கார்த்தி என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசித்து வரும் அவர் தாயைப் பார்ப்பதற்காக திருச்சிக்கு வருவராம்.
இந்நிலையில், நேற்று மாலை அதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான மலர்விழி மீரா என்பவரை பாலமுரளி சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த மலர்விழி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பாலமுரளியை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மலர்விழி மீராவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தது தெரியவந்தது.
திருமணத்திற்கு முன்பிருந்தே பாலமுரளி கார்த்தி, மலர் விழிமீராவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், சகோதரி முறையான தன்னை காதலிப்பது தவறு என்று அவர் கண்டித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பாலமுரளி தன்னை காதலிக்குமாறு மீராவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர்விழி மீராவோ மறுப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கு இடையில் இரண்டு வருடத்திற்கு முன்பு பாலமுரளிக்கு திருமணம் ஆகி 1 குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையிலும் தொடர்ந்து தன்னுஐடய ஆசைக்கு பலவந்தபடுத்த முயற்சி செய்திருக்கிறார். மீரா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கவே இதில் காமவெறியில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பாலமுரளி அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலமுரளி கார்த்திக்கை தலைநகர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கொலையான மீராவின் தந்தை திருச்சி புதிய தமிழகம் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.