Skip to main content

''நட்டா வந்தாலும் பாஜக இங்கு நோட்டாவிற்கு கீழேதான்'' - சீமான் பேட்டி!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

seeman pressmeet in madurai

 

மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், 

 

உரிய நேரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையால் தான் விவசாயி தற்கொலை நடந்துள்ளது. மீனவர் படுகொலையில் மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் தரவில்லை. வலிமை மிக்க இந்திய அரசு ஏன் நமது மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. நம் நாட்டின் வெளியுறவுக்கொள்கையே தவறாக உள்ளது. நட்பு நாடு எனக் கூறி நமது மீனவர்களைக் கொன்றுகுவிக்கும் அவர்களுக்கே ஆயுதம் மற்றும் பயிற்சிகளை இந்திய அரசு வழங்கிவருகிறது என்றார்.

 

மேலும், ராகுல் காந்தி தமிழகம் இந்தியாவாக உருவாகும் நிலைவரும் என்று கூறிய கருத்துக்குப் பதில் அளித்த சீமான், தமிழ்நாடு தமிழகமாகத்தான் இருக்கவேண்டும். நீர் இலவசம் என்பன உள்ளிட்ட கொள்கையின் அடிப்படையில் வெளிப்படையான நிர்வாகம் என்பதே எங்கள் கொள்கை. தமிழகத்தில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மத்திய பட்ஜெட்டே அல்வா தான். தமிழகத்திற்கு நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழேதான் பாஜக. சசிகலா உடல்நலத்துடன் மீண்டுவர வேண்டும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்