Published on 19/01/2021 | Edited on 19/01/2021

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் இன்று (19.01.2021) திறக்கப்பட்டது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளில் இன்று மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள், ரோஜா பூ உள்ளிட்டவைகளை வழங்கி, பன்னீர் தெளித்து வரவேற்பு வழங்கினார்கள்.
கரோனா பாதிப்பால் மூடிக் கிடந்த வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டுப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, பள்ளி வளாகத்தில் காய்ச்சல் பரிசோதனை செய்து பின்னர் சேனிடைசர் மூலம் கைகளைக் கழுவிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பெற்றோர்களின் அனுமதி கடிதத்தோடே வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கபட்டனர்.