வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் பல்வேறு சங்கங்களின் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் முன்பு நேற்று ஆகஸ்ட் 3ந்தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட 100க்கும் அதிகமான பேராசிரியர்கள், விரிவரையாளர்கள் கலந்துக்கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர். முழக்கத்துக்கு பின்னர், இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட முன்வரைவை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை பிரதானமாக வைத்து பேசினர்.
மேலும், அரசு பல்கலைகழகங்கள், அரசு கல்லூரிகளுக்கான நிதியுதவியை குறைக்ககூடாது, தற்காலிக, பகுதிநேர, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கான சமவேலைக்கு, சம ஊதியம் என்கிற நீதிமன்ற உத்தரவுடிப்படி வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை முறையான நியமனங்கள் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.