மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி என சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அவர் அதிமுகவை ஆதரிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்.
தனித்து போட்டியிடுவதையே சமக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆகையால் நாடாளுமன்றத் தேர்தலில் சமக தனித்து போட்டியிடும் என்று சரத்குமார் தெரிவித்து வந்த நிலையில், நெல்லை தொகுதி சமக கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரத்குமார் ஏற்கனவே தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆகையால் நெல்லை மாவட்டத்திற்கு அவர் நன்கு பரிச்சயமானவர் என்பதால் இந்த மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அத்தொகுதி நிர்வாகிகள் அவரை வலியுறுத்தினர். இந்த நிலையில் அவர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.