திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள புதிய மாங்கனி அரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
காவிரி கொள்ளிடம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணல் கொள்ளை சிறிது தடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கரூர் போன்ற மாவட்டங்களில் மணல் கொள்ளை முழுவீச்சில் நடக்கிறது. விழுப்புரத்தில் மணல் கொள்ளை உச்சத்தை அடைந்துள்ளது.
சங்கராபரணி தென்பெண்ணை மணிமுக்தா ஆறுகளில் மற்றும் ஏரிகளில் அதிகளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது. மணல் கொள்ளைக்கு துணை போவதாக விழுப்புரத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தமிழக அரசு தலையிட்டு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மேலும் மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மத்திய மாநில அரசுகள் துணை போக கூடாது. அந்த ஆலைக்கு ஆதரவாக விவசாயம் அமைப்பு என்ற என்ற பெயரிலும் தொழிலாளர் நல பிரிவு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
அதன் மூலம் அந்த ஆலையை திறக்க கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த ஆலயம் புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது மக்களின் உயிருக்கு வேட்டு வைக்கும் இந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது.
ஆசிய நாடுகளை புரட்டிப்போட்ட பெரும்புயல் தமிழகத்தையும் தாக்கும் அபாயம் உள்ளது. இதனை சமாளிக்க அரசானது தயாராக வேண்டும். புயலின் தாக்கம் 240 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. அதேபோல் புயல் ஏற்பட்டால் தமிழகத்திலும் அந்த அளவுக்கு புயலின் வேகம் இருக்கும்.
பணக்கார நாடுகள் என்பதால் அமெரிக்கா போன்ற நாடுகளை சமாளித்தது. ஆனால் தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை சமாளிக்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். அதிக மழை புயல் வறட்சி என பன்மடங்கு அதிகமாகும் என உலக அறிவியலாளர்கள் கருத்தாக உள்ளது.
எனவே வங்கக்கடலில் புயல் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் அரசுக்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். மக்கள் தொலை நோக்கு பார்வை உள்ள அரசை பெற்றுள்ளதா என சந்தேகபடும் படியாக உள்ளது என பேசினார்.
.