சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தில் தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ஆகியோர் தலைமை செயலாளருடன் உடனிருந்தனர். ரூபாய் 1000 கோடி மதிப்பில் சேலம்- விழுப்புரம் மாவட்ட எல்லை அருகே கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அரசாணை வெளியிடப்படும் என்று தலைமைச்செயலாளர் தகவல்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , சமீபத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்ற முதல்வர், அங்கு புகழ்பெற்ற கால்நடை பூங்காவை பார்வையிட்டு, தலைவாசலில் அமைக்கப்படவுள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.