மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை இணையத்தில் தொடராக கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவின் இளமைகால பருவம், திரைப்படங்களில் நடித்த பருவம், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது முதல் இறந்தது வரை அனைத்தையும் படமாக்கியுள்ளார். மேலும், இயக்குனர் ஏ.எல். விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க இருக்கிறார். இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

gautham  vasudev

கௌதம் மெனன் எடுக்கும் வெப் சீரிஸில் ஜெயலலிதா குழந்தை கதாபாத்திரத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்கிறார். இளமைப்பருவ கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சோபன்பாபு கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித் நடிக்கிறார்.

Advertisment

‘குயின்’ என்று பெயர் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் நடந்துவரும் நிலையில் சசிகலா கதாபாத்திரம் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அண்மையில் இந்த தொடரின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கௌதம் மேனனுடன் இணைந்து கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசனும் இயக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இதற்கு எதிர்பை தெரிவித்திருக்கிறார். “தனது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து படமோ, வலைதள தொடரோ யாரும் எடுக்க கூடாது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக கௌதம் மேனன் இயக்கும் வலைதள தொடருக்கு இதுவரை அனுமதி பெறவில்லை” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.