சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன், முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் சரவணனைக் காட்டிலும் 8443 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

சேலம் மக்களவை தொகுதியில் முதல் சுற்று நிலவரம்:
திமுக 27348
அதிமுக 18905
அமமுக 2283.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், சேலம் மக்களவை தொகுதி உள்ளது.
இந்த தேர்தலில் மெகா கூட்டணி, ஆளுங்கட்சி செல்வாக்கு, பணபலம் என ஏக செல்வாக்குடன் அதிமுக களம் இறங்கியதால் எப்படியும் அதிமுக மூன்றாவது முறையாக சேலம் மக்களவை தொகுதியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, தபால் வாக்குகளிலேயே ஆளும் அதிமுக பின்னடைவைச் சந்தித்தது. அடுத்து மின்னணு வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டன.
சேலம் மக்களவையில் அடங்கியுள்ள ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்தது.
முதல் சுற்று முடிவில், திமுக வேட்பாளர் பார்த்திபன், அதிமுக வேட்பாளர் சரவணனைக் காட்டிலும் 8443 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். நோட்டாவில் 698 வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.