Published on 28/01/2020 | Edited on 28/01/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதல்வர் பழனிசாமி நீர்திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து 263 நாட்களில் 150 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மேலும் டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்து அறுவடைக்காலம் நெருங்கியதால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.