Skip to main content

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 20/08/2020 | Edited on 20/08/2020

 

salem district mettur dam water

 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது.

 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,079 கனஅடியிலிருந்து 34,366 கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 99.10 அடியாகவும், நீர்இருப்பு 63.68 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் 16,500 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு 500 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்