Published on 09/12/2021 | Edited on 09/12/2021

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கரடிப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தின் செயலாளராக மாதேஸ்வரன் (பொறுப்பு) பணியாற்றி வந்தார். அவர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, சங்கத் தலைவர் செல்வம், செயலாளரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். எனினும், அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை எதுவும் இதுவரை தரப்படவில்லை.
இதையடுத்து முதுநிலை எழுத்தர் மாரியப்பன், சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாதேஸ்வரன் மீதான புகார் குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.