தமிழகத்திற்கு காவி அரசியல்தான் நல்லது. காலி அரசியல் நல்லதல்ல என பாஜக எம்.பி., இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளின் படி எடப்பாடி பழனிசாமி அரசு இடம் ஒதுக்கித் தராமல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவது நல்லதல்ல.
தமிழகத்திற்கு காவி அரசியல்தான் நல்லது. காலி அரசியல் நல்லதல்ல. பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசுடன் தமிழகம் ஒத்துழைக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உரிமைக்காகப் போராடும் விவசாயிகளுக்கு பா.ஜ.க துணை நிற்கும்.
காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழக மீனவர்கள் 300 பேரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு தமிழக மீனவர்கள் ஒருவரைக் கூட இலங்கைக் கடற்படை கொலை செய்யவில்லை.
கோயில்களைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதை முறையாக செயல்படுத்த வேண்டும். இந்துக் கோயில்களை இந்துக்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். அப்படிச் செய்தால் செலவாகிற பணம் மிச்சமாவதோடு கோயில்கள் முறையாகப் பாதுகாக்கபடும் பராமரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Published on 15/02/2018 | Edited on 15/02/2018