கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடு,
மார்க்சிஸ்ட் போராட்டம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்தில் இளங்கியனூர், கொளவாய், ஒரங்கூர் உள்ளிட்ட ஊர்களுக்கு கிராம உதவியாளர்கள் பணி நியமனத்துக்காக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து பலரும் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில் பணி நியமனம் செய்வதில் முறைகேடு நடப்பதாக கூறி மார்க்சிஸ்ட் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
- சுந்தரபாண்டியன்