வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதலைகண்டித்தும், வங்கதேச இந்துகளை பாதுகாக்க கோரியும் வேலூரில் வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு (ஆர்எஸ்எஸ்) சார்பில் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி அமைப்பினர் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சித்ரா தனியார் மஹாலில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு போலீசார் மதிய உணவு வழங்கினார்கள். அந்த உணவில் சிக்கன மாமிசம் கலந்து இருப்பதாக கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 50க்கும் மேற்பட்டோர் ஐயப்பனுக்கு மாலை அணிந்திருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கிய உணவில் மாமிசம்(சிக்கன்) கலந்திருப்பதாகவும், அதில் ஐயப்பன் பக்தர் ஒருவரின் சாப்பாட்டில் கறி துண்டு இருந்தாகவும் கூறி ஆர் எஸ்எஸ் அமைப்பினர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மண்டபத்திற்கு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் மண்டபத்திற்கு உள்ளே அடைத்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளாகவே கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். வெஜ் பிரியாணிதான் வழங்கியதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.