தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார் நடிகர் விஷால். இந்த சங்கத்தில் விஷாலுக்கு எதிராக ஒரு அணியினர் நேற்று திடீரென தியாகராயர் நகரில் உள்ள சங்க அலுவலகத்தை பூட்டினர். இதனால் இன்று காலை அந்த அலுவலகத்தை திறக்க வந்த விஷால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார்.
விஷாலுக்கு எதிராக திரண்டிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு அணியினர் விஷால் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன?
பெரிய பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ஆதரவாக விஷால் பாரபட்சமாக செயல்படுகிறார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்று வைப்புநிதியாக 7.85 கோடி ரூபாய் இருந்தது. அந்த 7.85 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்டால் இதுவரையில் பதில் இல்லை.
தயாரிப்பாளர் சங்க வங்கிக்கணக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை.
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு விஷால் வருவதே இல்லை.
தமிழ் ராக்கர்ஸில் விஷாலுக்கு பங்கு உள்ளது என்றும், கிரிமினல் செயல்களில் அவர் ஈடுபடுகிறார்.
சங்க நிர்வாகிகள் 150 பேரை நீக்கியிருக்கிறார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்று பதிவுத்துறை அலுவலகம் ஒன்று உண்டு. ஆனால், விஷால் தலைவராகப் பொறுப்பேற்றதும் புதிதாக ஒரு கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அலுவலகம் அங்கே நடைபெறுகிறது.
இதற்கு முன்பாக நடந்த பொதுக்குழுவில் கேள்வி கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
இரண்டு வருடங்கள் ஆகியும் பொதுக்குழுவை கூட்டவில்லை.
இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர்.