Skip to main content

ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை 

கோவை மாவட்டம், சிங்காநல்லுார் அருகிலுள்ள நீலிகோணம்பாளையம், என்.ஜி.ஆர்.நகரில் வசிப்பவர் தாமோதரன் (வயது-70). இவருடைய மனைவி பெயர் சுந்தரமணி. இவர்கள் இருவரும், லட்சனா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தனர்.

கோவையிலுள்ள சவுரிபாளையம், ஜி.வி.ரெசிடென்சியில் வசிக்கும் தமோதரனின் அக்கா விஜயலட்சுமியிடம் (வயது-77) என்பவரிடம் தாங்கள் பங்குதாரராக இருக்கும் லட்சனா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் உங்களின் தொகையை டெபாசிட் செய்தால், வங்கியில் கொடுப்பதைக்காட்டிலும் அதிக வட்டி பெற்றுத் தருவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து விஜயலட்சுமி தன்னுடைய சேமிப்பில் வைத்திருந்த ஐந்து இலட்சம் ரூபாயை லட்சனா பைனான்ஸ் நிதி நிறுவனத்தில், டெபாசிட் செய்வதற்காக தாமோதரம் மற்றும் சுந்தரமணியிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், விஜயலட்சுமி கொடுத்த பணத்தை லட்சனா பைனான்சில்  டெபாசிட் செய்யாமல் இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில், பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி, 2004 மே 20-இல் சிங்கநல்லுார் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து தாமோதரம், சுந்தரமணி இருவர் மீதும், கோவை ஜே.எம்:3, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரித்த மாஜிஸ்திரேட் வேலுச்சாமி, குற்றம் சாட்டப்பட்ட தாமோதரன், மனைவி சுந்தரமணிக்கு, தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், விஜயலட்சுமியிடம் இருந்து வாங்கிய தொகை ஐந்து லட்சம் ரூபாய் பணத்தையும் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்