Skip to main content

“வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தால் ரூ.4800 வழங்கப்படும்” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

"Rs. 4500 will be given if water has entered the houses" - Minister K.K.S.S.R. Ramachandran

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

 

கனமழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்குப் பாதிப்பின் அளவை பொறுத்து நிவாரணத் தொகை வழங்கப்படும் எனக் கூறினார்.

 

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “முதல்வரின் நேரடிப் பார்வையால் சென்னையில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை. மயிலாடுதுறை, சீர்காழி போன்ற மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். அங்கே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குக் கொடுக்க வேண்டிய நிவாரணம் தொடர்பாக அரசாங்கத்தில் வரையறை இருந்தால் கூட  முதல்வர் வந்தபின் தான் அதற்கு முடிவு தெரியும்.

 

இப்பொழுது அரசாங்கத்தின் கணக்குப்படி வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருந்தால் 4800 ரூபாய். குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ. 5000. பகுதி இடிந்திருந்தால் 4100 ரூபாய். அதே போல் கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால் 95000 ரூபாய். இது இப்பொழுது இருக்கும் செயல்பாடுகள். முதல்வர் பார்வையிட்டு வந்த பிறகு இந்த தொகைகள் எல்லாம் வழங்குவதற்கு உண்டான பணிகளைச் செய்கிறோம்.

 

விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்