திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.31 லட்சம் மோசடி!
திருச்சியில் பாரதியார் பல்கலைகழகத்தின் தொலை தூர கல்வி மையத்தின் இயக்குநர் ரவிகுமார் மீது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி புகார் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் யாரும் தீவிரமாக விசாரணை செய்யாமல் தவிர்த்து வருவதால் நீதிமன்ற உத்தரவின் மூலம் வழக்கு பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
திருச்சி லால்குடி அருகே உள்ள விரகாலூரை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர்,
திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி மையத்தின், திருச்சி கிளை இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். அந்த பல்கலைக்கழகத்தில் தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2015-ம் ஆண்டு தன்னிடம் ரூ.9 லட்சம் பெற்றுக்கொண்டார். அப்போது வேலைக்கான ஒரு உத்தரவு ஆணையை வழங்கினார். அதை பல்கலைக்கழகத்தில் கொடுத்த போது அது போலி ஆணை என்று தெரிந்தது. இதைத்தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்ட போது அவர் பணம் தர மறுத்து வருகிறார். எனவே பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதே போன்று தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த சின்னதுரை என்பவர் அதே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கும் அதே பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரவிக்குமார் ரூ.22 லட்சம் பெற்றுக்கொண்டு போலியான வேலை ஆணையை வழங்கினார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
2 மனுக்களை விசாரித்த நீதிபதி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி மைய இயக்குனர் ரவிக்குமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எனது தாய் கண்ணகிக்கு தெரிந்த ஒருவர் மூலம் திருச்சி தில்லை நகரில் கோவை பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் காலி பணியிடம் இருப்பதாகவும், அந்த பணியை பெற்று தருவதாகவும் கூறினார். இதையடுத்து நான் மற்றும் எனது குடும்பத்தினர் திருச்சியில் தில்லைநகர் 6வது கிராஸ்சில் பாரதியார் பல்கலை. தொலைதூர கல்வி மைய கிளை இயக்குநர் ரவிக்குமார் என்பவரை சந்தித்தோம்.
இதில், திருச்சி தில்லைநகர் கிளையில் ஒருங்கிணைப்பாளர் பதவி வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ.15 லட்சம் வாங்கினார். பாரதியார் பல்கலைக்கழக அங்கீகார கடிதத்தை காட்டியதால் நம்பி பணத்தை கொடுத்தேன். மாதம் ரூ.52 ஆயிரம் சம்பளம் என கூறி ரூ.9,000 பிடித்தம் போக பாக்கி தொகை ரூ.43,000 வங்கி மூலம் வழங்கப்பட்டது. அதன்பின் தில்லைநகர் அலுவலகத்தை டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரத்திற்கு மாற்றினார். அதனை தொடர்ந்து விசாரித்தபோது அவரது நிறுவனம் போலியானது என தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் மறுத்து மிரட்டுகிறார்.
பாரதியார் பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் முத்திரை, லோகோ, கையொப்பம், ஆகியவற்றை போலியாக தயாரித்து போலியாக இணையதளம் ஏற்படுத்தி மோசடி செய்த ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தையும் ஆவணங்களையும் திருப்பி பெற்று தரவேண்டும். இதே போல் இவர் மேலும் 170 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என்று கூறியிருந்தார். இதையடுத்து புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரனுக்கு கமிஷனர் பரிந்துரைத்தார்.
இந்நிலையில் தங்கள் பல்கலை கழகத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடந்திருப்பது குறித்து அறிந்த, பாரதியார் பல்கலை கழக பதிவாளர் சார்பில் தொலைதூர கல்வி இயக்குநர இயக்குனர் தாமஸ், மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். அதில், தங்களது பல்கலை கழக லோகோ, இணையதளத்தை பயன்படுத்தி மோசடி நடந்திருப்பதாக புகார்கள் வந்தது. மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது திருச்சியில் 3 கிளைகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளார். அதுபோல் அப்போதைய மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ரமேஷ்பாபுவிடமும் பல்கலைக்கழக இயக்குநர் புகார் அளித்தார்.
இதே போல் தொடர் புகார்கள் வந்து கொண்டே இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எதுவும் இல்லாததால் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் மோசடி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார்கள் கல்வி ஆர்வலர்கள்.
- ஜெ.டி.ஆர்