Published on 15/10/2021 | Edited on 15/10/2021
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை மிராக்கி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கீழ்ப்பாக்கம் இணைந்து ‘பெண்கள் 100’ என்ற தலைப்பில் 100 பெண்களுக்கு சுயதொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பயிற்சியை முடித்த பெண்களுக்கு சென்னை வேப்பேரியில் உள்ள அகர்வால் வித்யாலயா பள்ளி அரங்கில் நடைபெற்ற விழாவில் பல்வேறு சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் ரோட்டரி கிளப்பின் மாவட்ட கவர்னர் ஜெ. ஸ்ரீதர் பயிற்சி முடித்த பெண்களுக்குத் தையல் எந்திரங்கள், எம்பிராய்டிங் உபகரணங்கள், டேல்லி (Tally) படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கி பெண்களை ஊக்குவித்தார்கள்.