சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் செய்யும் இயந்திரங்களைத் தேர்வுசெய்து வடமாநில கொள்ளையர்கள் கடந்த மூன்று நாட்களாக பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 16 புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் முறையாக ஆவணங்கள் கொடுக்கப்பட்ட 7 புகார்களின் அடிப்படையில் 33 லட்சம் ரூபாய் என மொத்தம் 48 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் 2 தனிப்படை நேற்று (22.06.2021) ஹரியானா சென்று இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை தேடிவருகின்றனர். டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று தேசியக் கொள்ளையர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், இன்று காலை சென்னை தி.நகர் துணை ஆணையர் ஹரிகரன் பிரசாத் தலைமையில் சென்ற போலீசார், ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கொள்ளையனைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர், புகைப்படம் ஆகியவை வெளியிடப்படவில்லை. மீதமுள்ளவர்கள் தப்பிவிடாமல் இருக்க போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் மீதமுள்ள 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.