29வது ஆண்டு தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு ராமநாதபுர மாவட்ட காவல்துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கலந்து கொண்டு தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டியவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார்.
மேலும் சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், சாலை பாதுகாப்பு விதிகளை விளக்கியும் அதனை பின்பற்றி விபத்தினை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். வெப்பத்திலிருந்து கண்களை பாதுகாக்கும்பொருட்டு போக்குவரத்து காவலர்களுக்கு கண் கண்ணாடி வழங்கினார்கள்.
இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழு உட்கோட்டங்களிலும் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
Published on 27/04/2018 | Edited on 27/04/2018