சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிக அளவில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் டயர் வெடித்ததால், நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 27 பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் சில பயணிகளின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பேருந்தின் தகுதிச் சான்று 2018- ஆம் ஆண்டிலேயே காலாவதியான நிலையில், அதைப் புதுப்பிக்காமலேயே இயக்கியதும், 200- க்கும் அதிகமான போக்குவரத்து விதிமீறல்கள் இருப்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. '
இது தொடர்பான, சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Watch: CCTV footage of bus overturning at Dorina Crossing in central Kolkata, 27 people were injured in the accident that happened on Sunday. The Bankra-Park Circus route minibus was heading towards Howrah when the mishap happened. pic.twitter.com/fe5yy4Xp9i
— Soumyajit Majumder (@SoumyajitWrites) February 3, 2022