கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடுவது குறித்து
அதிகாரிகளிடம் புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தினசரி பொக்லின் இயந்திரம் மூலம் 30 க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் திருடுவதனை அதிகாரிகளுக்கு தகவல்கள் கொடுத்த கொள்ளிடம் ஆற்றுபாசன சங்க உறுப்பினர் ரமேஷ் மீது தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரைசேனன், துணைத் தலைவர் பாஸ்கர், லாரி ஓட்டுநர் மணிகண்டன், மாதவன் ஆகியோர் மீது லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரமேஷ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதி.
-இரா. பகத்சிங்