


Published on 18/09/2021 | Edited on 18/09/2021
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது சமாதியில் விசிக கட்சியினர் பலரும் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், அவரது பெயர்த்தி ரேவதி நாகராசன் தனது குடும்பத்தினருடன் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இரட்டைமலை சீனிவாசனுக்கு சென்னை கோயம்பேட்டில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.