Skip to main content

‘காளை’ வடிவில் ‘சின்னார் நெல்’ சாகுபடி செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர்

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

Retired Teacher Cultivated Chinnar Paddy in the Shape of a Bull!

 

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது நிலத்தில் காளை வடிவில் சின்னார் நெல் சாகுபடி செய்து அசத்தியுள்ளார். 

 

நாகை மாவட்டம், மாராச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வேணு காளிதாசன். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு சொந்தமான 15 ஏக்கர் விளைநிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து வருகிறார். 

 

பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தனக்கு சொந்தமான நிலத்தில் காளை வடிவில் சின்னார் என்னும் நெல் ரகத்தை நடவு செய்துள்ளார். இது மாராச்சேரி கிராமத்தினரை மட்டுமின்றி பல்வேறு மக்களையும் கவர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்