Skip to main content

பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்குவது நடக்காது - கலைச்செல்வன் பேட்டி

Published on 26/08/2017 | Edited on 26/08/2017
பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை 
நீக்குவது நடக்காது - கலைச்செல்வன் பேட்டி

டி.டி.வி. தினகரன் அணியில் 20 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இந்நிலையில் தினகரனை விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அதையடுத்து தற்போது டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இது பற்றி விருத்தாசலம் எம்.எல்.ஏ கூறியது:-

122 எம்.எல்.ஏக்களில் ஒருவரை துணை முதலமைச்சராக்காமல், சின்னத்தை முடக்க காரணமான 
பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சராக்கியது ஏன்? என்னைப் போன்று மனக்குமுறலுடன் பல எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது. கட்சி சின்னத்தை முடக்கி துரோகம் செய்த ஒருவர் இன்று துணை முதல்வராக உள்ளார்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்