Skip to main content

உடையநேரி காலனியில் போலிப்பத்திரப் பதிவை நீக்குக: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Published on 18/09/2017 | Edited on 18/09/2017
உடையநேரி காலனியில் போலிப்பத்திரப் பதிவை நீக்குக:
மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டையை அடுத்த உடையநேரி காலனியில் மோசடிக் கும்பலால் போலியாகப் போடப்பட்டுள்ள பத்திரப் பதிவுகளை நீக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடையநேரிக் காலனியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவேண்டும்.  போலியாப் போடப்பட்டுள்ள பத்திரப்பதிவுகளை நீக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நில மோசடியைக் கண்டித்து போராடிய அப்பாவி மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும். குடியிருந்து வரும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வீட்டு ரசீது வழங்க வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டு தீயிட்டு எரிக்கப்பட்ட 32 வீடுகளுக்கு காலதாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். 

நில மோசடி சம்பந்தமாக முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அங்கு வசிப்பவர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை உள்ளிட்டவைகளை உடையநேரி முகவரிக்கு மாற்ற வேண்டும். அவர்களுக்கு நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். அங்கு தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குழைவு ஏற்பட்டுள்ள நிலையில் கோட்டாட்சியர் போட்ட 145 தடை உத்தரவை காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்hபட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு கட்சியின் புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சம்முக பழனியப்பன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.பிரவாகன், டி.சலோமி, துரை.நாராயணன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.பன்னீர்செல்வம், துணைத் தலைவர் ஆர்.சோலையப்பன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி உள்ளிட்டோர் பேசினர். ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

- பகத்சிங்

சார்ந்த செய்திகள்