Skip to main content

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்..!(படங்கள்)

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

கரோனா ஊரடங்கில் மாற்றுத்திறனாளிகள் பசியின்றி வாழ, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பாக அதன் மாநிலத் தலைவர் ரெ. தங்கம் ஏற்பாட்டில், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள்  உள்ளிட்ட நிவாரண தொகுப்பு பையினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாணப் பொருட்களை வழங்கினாா்கள். சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் க. சுப்பிரமணி, துறைமுகம் கிழக்கு, மேற்கு கழக பகுதிச் செயலாளர்கள் எஸ். முரளி, எஸ். ராஜசேகரன், சங்க மாநில நிர்வாகிகள் எஸ். சரவணகுமாா், கே. இளங்கோவன், கழக நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்