ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் இரண்டு நாட்களுக்கான மாநாடு மற்றும் பொருட்காட்சி மார்ச் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் பீளமேடு PSG வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக ஜக்கியை அழைத்துள்ளதாக நேற்று முன்தினம் ‘தி இந்து’ தினசரி நாளிதழில் ஜக்கி ஃபோட்டோவோடு ஒரு முழுப் பக்க விளம்பரத்தை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் கொடுத்திருந்தார்கள்.
இந்நிலையில், ஈஷாவில் சிறைப்பட்டிருக்கும் தன் இரு மகள்களுக்காகவும் ஜக்கிக்கு எதிராகவும் சட்டப் போராட்டம் நடத்தி வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் காமராஜ், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகியை தொடர்பு கொண்டு ‘நிகழ்ச்சிக்கு 420 ஜக்கியை அழைத்தால் அம்பேத்கர், பெரியார் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் சார்பாக நிகழ்ச்சி நடைபெறும் PSG வளாகத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் எச்சரிக்கையை அடுத்து சி.ஐ.டி. அதிகாரிகள், பேராசிரியர் காமராஜை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பேசிய பேராசிரியர் காமராஜ், “தந்தை பெரியார் திராவிட கழக ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (16ம் தேதி) ஆளுநருக்கு சாம்பல் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சிக்கு பிறகு கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளோம்.
இதற்கிடையே அதே இந்து தினசரி நாளிதழில் இன்று (16.03.2023) வந்த ஒரு முழுப் பக்க விளம்பரத்தில் 420 ஜக்கியின் ஃபோட்டோ இல்லாமல் அதே ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் இரண்டு நாட்களுக்கான மாநாடு மற்றும் பொருட்காட்சி குறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இது நமது இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதேபோல் ஜக்கி எந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.