காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக போராட தயாரா? என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தும் அதனை ஏற்காமல், அரசியல் லாபத்திற்காக இந்த விவகாரத்தை தமிழக அரசயில் கட்சிகள் பயன்படுத்துகின்றன.
அண்ணன் ஸ்டாலினாக இருக்கட்டும், திருநாவுக்கரசராக இருக்கட்டும் கர்நாடகாவில் உள்ள எம்.பிக்கள் காவிரி வாரியம் அமைக்கக் கூடாது என கூறுகிறார்கள், கர்நாடகா முதலமைச்சர் காவிரி வாரியம் அமைக்கக் கூடாது என கூறுகிறார். உங்கள் கூட்டணி கட்சி எம்.பிக்களிடம் முதலில் காவிர மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என ஏன் கூறுகிறீர்கள்? தமிழகத்தை ஏன் வஞ்சிக்கிறீர்கள் என கேள்வி எழுப்புங்கள்.
எல்லாவற்றையும் விட வேடிக்கை அண்ணன் திருநாவுக்கரசர் கூறுகிறார், போராட்டம் நடத்துவாராம்.. யாரை எதிர்த்து? சித்தராமையாவை எதிர்த்து போராட்டம் செய்யுங்கள்.. ஆனால் பாஜக அப்படியல்ல, நியாயமாக வழங்கக்கூடிய தண்ணீரை வழங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.