Skip to main content

ரேசன் அரிசி கடத்திய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் 

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

 

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் பங்காருபேட்டை பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

 

 - erode



அதன் பேரில் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார் கோபி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரியும், ஆம்னி வேனும் வந்தது. அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியிலும், வேனிலும் 12 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
 

பிறகு லாரி, வேனில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அம்மாபேட்டை சித்தார்பகுதியைச் சேர்ந்த சாம்சன், நம்பியூரைச் சேர்ந்தவர் ரமேஷ், அழுகுளி என்ற பகுதியைச் சேர்ந்த சிவகுமார், ஒட்டர் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் மற்றும் சென்னையை சேர்ந்த தாமோதரன் ஆகியோர் என தெரியவந்தது.  


 

இவர்கள் யாருக்காக ரேஷன் அரிசியை கடத்தி செல்கிறார்கள் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும், ஆம்னி வேனும், 12 டன் ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரனையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரின் உறவினர்தான் இந்த ரேசன் அரிசியை தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு கடத்த ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. அப்புறம் எப்படி விசாரணை தீவிரமடையும்? என்கிறார்கள் பொதுமக்கள்.
 


 

சார்ந்த செய்திகள்