அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கரோனா தொற்று பயம் காரணமாகவும் 175 பேர் மட்டுமே விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கான விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் அயோத்தியில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன செங்கற்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக முதல்வர் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அதில், ராமர் கோயில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் என்றும், ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதற்கு மனமார்ந்த பாராட்டு எனவும் தெரிவித்துள்ளார்.