Skip to main content

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாகதமிழகம் வருகிறார்

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 12 ஆம் தேதி வெள்ளி கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு டில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமானநிலையம் வருகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்பு உடனடியாக தனி ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு அத்தி வரதா் தரிசணம் செய்கிறார். பின்பு ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டி ஆளுநா் மாளிகை சென்று தங்குகிறார். 


  RamNathKovind


 

மறுநாள் சனிக்கிழமை மாலை  4.35 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் ஆந்திரா மாநிலம் ரேணுகுண்டா புறப்பட்டு செல்கிறார். அதைப்போல் துணை ஜனாதிபதி வெங்கய நாயுடு 13 ஆம் தேதி சனிக்கிழமை பகல் 12.55 மணிக்கு மைசூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமானநிலையம் வருகிறார். 

 

சனி, ஞாயிறு 2 நாட்கள் சென்னையில் இருக்கும் வெங்கய நாயுடு 15 ஆம் தேதி திங்கள் காலை 6.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்திலிருந்து தனி விமானத்தில் டில்லி செல்கிறார். ஜனாதிபதி,துணை ஜனாதிபதி ஆகியோர் வருகையையொட்டி சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


 

குறிப்பாக பழைய விமானநிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனைக்கூட்டம் சென்னை பழைய விமானநிலையத்தில் இன்று நடந்தது. அதில் டில்லியிலிருந்து வந்திருந்த உயா் அதிகாரிகள், போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்படை அதிகாரிகள், முக்கிய பிரமுகருகளுக்கான பாதுகாப்பு ஊயா் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
 

 

சார்ந்த செய்திகள்